Monday, 29 May 2017

முதுகுவலி நீங்க 6 வழிகள்!




நவீன வாழ்வால் நமக்கு ஏற்பட்ட பாதிப்பு முதுகுவலி. ஆனால், இதை நம்மால் தவிர்க்க முடியும் என்பதுதான் நல்ல விஷயம். சில முக்கியமான விஷயங்களைக் கடைப்பிடிப்பதன் மூலம் முதுகுவலியை முறியடிக்கலாம்.

1. ஆரோக்கியமான எடை:

பெரும்பாலானவர்களுக்கு முதுகுவலி ஏற்பட, உடல் பருமன் ஒரு காரணம். உயரத்துக்கு ஏற்ற சரியான எடையைப் பராமரிப்பது முதுகுவலியை அண்ட விடாமல் செய்யும்.

2. முதுகுத் தசையை வலுவாக்குங்கள்:

முதுகுத் தண்டுவடம்தான் மேல் உடலின் ஆதாரம். இது வலுவாக இருக்க, முதுகுத் தசைகள் வலுவாக இருக்க வேண்டியது அவசியம். எனவே, அதற்கான ஸ்ட்ரெச்சிங் மற்றும் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்.

3. நல்ல உடல் அமைப்பு (Posture) பராமரிப்பு:

தவறான பொசிஷனில் அமர்வது, படுப்பது, எழுந்திருப்பது,  நடப்பது போன்றவை முதுகுவலியை ஏற்படுத்தும். தோள்பட்டை வளையாமல், கூன் விழாமல் அமர்வது, முதுகை வளைக்காமல் எழுவது போன்றவை முதுகுவலியில் இருந்து காக்கும்.

4. கனமானவற்றைத் தூக்கும்போது கவனம்:

கனமான பொருட்களைத் தூக்கும்போது முதுகெலும்பு பாதிக்கபடும். கனமான பொருட்களைத் தூக்கும் முன்னர், முதுகை வளைக்காமல் அமர்ந்து, அந்தப் பொருளைப் பற்றி, தூக்கிய பின்னர் நிதானமாக உயர்த்த வேண்டும்.

5. கனமான பர்ஸைப் பின்புற பாக்கெட்டில் வைக்காதீர்கள்:

சிலர், பர்ஸில் தேவையற்ற பில்கள், விசிட்டிங் கார்டுகள் என நிரப்பிக்கொண்டு, அதைப் பின்புற பாக்கெட்டில் வைத்து அமர்ந்திருப்பார்கள். இதனால் அமரும் கோணம் மாறுபட்டு முதுகுவலி ஏற்படும். எனவே, இதைத் தவிர்க்க வேண்டும்.

6. படுக்கையைக் கவனியுங்கள்:

ஆழ்ந்த உறக்கம் கிடைப்பதற்கு ஏற்ற செளகர்யமான படுக்கை, தலையணைகளைப் பயன்படுத்த வேண்டும். முதுகெலும்பை வளைக்காமல் உறங்குவது நல்லது. தூங்கும்போது முதுகெலும்பு வளைவதும் முதுகுவலிக்கு முக்கியமான காரணம்...

No comments:

Post a Comment