Monday, 29 May 2017

பெண்களின் உடல் எடை குறைய



  • நெல்லிக்காயை எடுத்து சுத்தம் செய்து கொட்டையை நீக்கி விட்டு நன்கு அரைத்து பிழிந்து சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் பருமன் குறையும்.

  • கேரட்டை நன்றாக துருவி போட்டு அதில் தேன் சேர்த்து நன்கு கலந்து சாப்பிட்டு வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் பருமன் குறையும்.

  • சோம்புவை எடுத்து சுத்தம் செய்து தண்ணீர் விட்டு காய்ச்சி அந்த நீரை அடிக்கடி குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

  •  தேநீரில் எலுமிச்சம் பழச்சாற்றை கலந்து காலையில் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

  • அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.

  •  உலர்ந்த கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் இவைகளை எடுத்து நன்றாக பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலையில் குடித்து வந்தால் உடல் எடை குறையும்.

  •  கரிசலாங்கண்ணி இலையை, பாசி பருப்புடன் சேர்த்து சமைத்து தினமும் சாப்பிட உடல் எடை குறையும்.

  •  பாதாம் பவுடரை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

  •  பூண்டு இரண்டு பல், ஓமம் கால் ஸ்பூன், மிளகு 3 மூன்றையும் ஒன்றாக சேர்த்து அரைத்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் கொழுப்பு கரையும்.

  •  லவங்கப் பட்டையுடன் வேப்பிலை, மிளகு இரண்டையும் சம அளவில் எடுத்து அரைத்து அதிகாலையில் இரண்டு கிராம் அளவுக்கு சாப்பிட்டால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரையும்.

  • முள்ளிக் கீரை சாறு எடுத்து அதில் நெல்லிக்காயை ஊற வைக்கவும். அதை வெயிலில் உலர்த்தி பொடியாக்கி காலை, மாலை இரு வேளையும் சாப்பிட்டால் தொப்பை குறையும்.

  •  பொன்னாங்கண்ணி கீரையுடன் மிளகு, துவரம்பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டால் உடல் இளைக்கும்.

  • பசலைக் கீரையுடன் பூண்டு, மிளகு, மிளகாய் வற்றல் சேர்த்து அவித்து கடைந்து சாப்பிட்டால் உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பு கரையும்.

No comments:

Post a Comment