பாகல் என்றவுடன் அதன் கசப்பு சுவை தான் நினைவுக்கு வரும். எனினும் இது உணவாக மாத்திரமன்றி சிறந்த ஒரு மருந்தாகவும் இருப்பதை அதிகமானவர்கள் கணக்கில் எடுப்பதில்லை. தற்காலத்தில் சர்க்கரை குறைப்பாட்டால் துன்பப்படுவோர்கள் பச்சையாக அரைத்து முகம் சுளிக்க குடிக்க உதவும் பாகற்காய் நமது முன்னோர்கள் பயன்படுத்திய மூலிகைகளில் ஒன்றாக இருக்கின்றது.
சுட்டிலைகளை கொண்ட கொடி வகையை சேர்ந்த பாகல் காயை சமையல் செய்து வற்றலாக்கி வறுத்து உணவுடன் சாப்பிடுவதும் நமது வழக்கம். இதன் பூக்கள் மஞ்சள் நிறத்துடனும், காய்கள் நீண்டும் உருண்டையாகவும் சொரசொரப்பாகவும் அமைந்திருக்கும். இவைகளின் காய் சிறியதாகவும் அதிக கைப்புள்ளதாகவும் இருக்கும்.
நிலப்பாகல், பொதுவாக பாகல் முக்குற்றங்களால் ஏற்படும் பெருக்கை அடக்கும். கழிச்சல் உண்டாகும் வயிற்றில் உள்ள புழுக்களை வெளியாக்கும். ஈரல்நோய், வாதநோய், உள்ளவர்கள் பழத்தை சமைத்து சாப்பிட தீரும். முழுப்பயனும் பெறுவதற்கு ஏனைய பழங்களை சாப்பிடுவது போல் சாப்பிடவேண்டும். இதனால் களைப்பு நீங்கி ஆயாசமும் தீரும்.
சிலருக்கு மாலை நேரம் சூரியன் மறைந்தவுடன் பார்வை மங்கி எதுவும் தெரியாது. மீண்டும் காலையில் சூரியன் உதயம் ஏற்பட்டவுடன் தான் பார்வை தெரியும். இதை மாலைக்கண் நோய் என்பார்கள். இவர்கள் பாகல் இலைச்சாற்றுடன் சிறிது அளவு மிளகை சேர்தரைத்துக் கண்ணைச்சுற்றி பற்றிட மாலைக்கண் குறைபாடு படிப்படியாக நீங்கும். காலையில் வெறும் வயிற்றில் இலைச்சாற்றை 30மில்லி லீட்டர் அளவில் குடித்துவர வயிற்றுபூச்சி கழிந்து வெளியேறும்.
பாகல் இலைச்சாறு, ஆனைபுளிச்சாறு, பழுத்த வெற்றிலைச்சாறு, நாவல்பட்டைச்சாறு ஆகியவற்றை ஒரெடையாக எடுத்து அதில் சிறிதளவு வசம்பு உரைத்து 7நாட்கள் குழந்தைகளுக்கு கொடுத்தால் கல்லீரல், மண்ணீரல் கட்டிகள் கரைந்து போகும். பாகல் வற்றலை வறுத்து சாப்பிட மூலம் காமாலை நீங்கும். இதை உண்ணும் காலத்தில் அசைவ உணவை முற்றிலும் விலக்க வேண்டும்.

No comments:
Post a Comment