Friday, 2 December 2016

அதிமதுரம் தேநீர் தயாரிப்பு முறையும், அதனை குடித்தால் உண்டாகும் 5 மருத்துவ நன்மைகள் தெரியுமா?

அதிமதுரம் இயற்கையில் கிடைத்த மருத்துவ மூலிகை. இது பல பிரச்சனைகளை போக்கக் கூடியது. இருமல், தலைவலி சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இதனை எடுத்துக் கொள்வதால் நோயின் தீவிரம் குறையும். 



அதிமதுரம் பல அற்புத மருத்துவ குணங்களைக் கொண்டது. 
இது சர்க்கரை ரத்தத்தில் கட்டுப்படுத்தும். சர்க்கரை வியாதிக்காரர்களுக்கு நல்லது. அதோடு தலைவலிக்கும் ஆறுதல் அளிக்கும். அதிமதுரம் தே நீர் தயாரிக்கும்போது அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்தே தயாரிக்க வேண்டும். சர்க்கரை உபயோகிக்க வேண்டாம்.




அதிமதுரம் தே நீர் தயாரிக்கும் முறை : முதலில் உரல் அல்லது கல்லில் அதிமதுரத்தை நன்றாக தட்டிக் கொள்ளுங்கள். பின்னர் நீரை கொதிக்க வைத்து அதில் தேவையான அளவு பனங்கற்கண்டை சேர்க்கவும். பனங்கற்கண்டு கரைந்ததும் அதில் நசுக்கி வைத்திருந்த அதிமதுரத்தை சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள். பின் இறக்கி வைத்து ஆறியதும் வடிகட்டி குடிக்க வேண்டியதுதான். 

சரி இனி இதன் நன்மைகள் என்ன என்று பார்ப்போம்


#வயிற்று வலி 

 வயிற்று வலியை போக்கும். வயிறு சம்பனதமான அனைத்து பிரச்சனைகளையும் தடுக்கும்.


#இருமல்


இருமலுக்கு குறிப்பாக வறட்டு இருமலுக்கு மிகச் சிறந்த முறையில் தீர்வை தருகிறது.


#மலச்சிக்கல்


மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் 4 நாட்களுக்கு இந்த தேநீரை அருந்தினால் விரைவில் குணம் பெறுவார்கள்.


#ஆர்த்ரைடிஸ்


ஆர்த்ரைடிஸ் உள்ளவர்களுக்கு மூட்டில் வரும் வீக்கத்தினை கட்டுப்படுத்துகிறது.


#மாதவிடாய் வலி


 மாத விடாய் சமயத்தில் இந்த நீரை அருந்துவதால், வலி, தசை பிடிப்பு ஆகியவற்றிலிருந்து விடுபடலாம். புத்துணர்ச்சி உண்டாகும்.


❌குறிப்பு

                   

ரத்த அழுத்தம் மற்றும் கர்ப்பிணிகள் இந்த தேநீரை தவிர்க்கவும். இந்த தேநீரில் உள்ள மருத்துவ குணங்கள் சிகிச்சைக்காக மிகவும் உதவும். பிரச்சனைகளை சரிப்படுத்தும். ஆனால் சாதரணமாக தினமும் குடிப்பது உகந்ததில்லை.

No comments:

Post a Comment