Monday, 5 December 2016

முகச்சுருக்கம் போக்க இயற்கை அன்னை தந்த கொடை!


ஆவாரை

ஆவாரை இருக்கும்போது சாவாரைக் கண்டதுண்டோ..? இது பழமொழி. இந்த பழமொழியிலிருந்தே ஆவாரையின் மருத்துவ குணத்தை நாம் உணரலாம். இது முகச்சுருக்கத்தைப் போக்கவும் பயன்படுகிறது. ஆவாரம் பூவை காய வையுங்கள். காய்ந்த ஆவாரம் பூ பொடி செய்து 5 கிராம் எடுத்துக்கொள்ளுங்கள். கூடவே காய்ந்த புதினா இலைப் பொடி 5 கிராம், கடலை மாவு 5 கிராம், பாசிப்பயிறு மாவு(பயற்ற மாவு)5 கிராம்.

ஆலிவ் எண்ணெய்

இவற்றுடன் Olive Oil கலந்து நன்கு குழைத்து முகத்தில் பூசி பதினைந்து நிமிடங்கள் ஊறவிடுங்கள். பிறகு நன்கு குளிர்ந்த நீர் கொண்டு முகத்தை கழுவுங்கள். தொடர்ந்து இரண்டு வாரங்கள் இந்த முறையைச் செய்து வந்தால் தோலில் சுருக்கங்கள் மறைந்து தோல் இளமை பெறும். புதுப்பொலிவுடன் காட்சி தரும்.

குளிர்ந்த நீர்

மற்றொரு முறை: வெள்ளிக் காய் துண்டு இரண்டும், நாட்டுத் தக்காளி ஒன்றும், சிறிதளவு புதினா இலை அவற்றை எடுத்து நன்றாக அரைத்துக்கொள்ளுங்கள். பிறகு அரைத்த விழுதை முகத்தில் நன்றாக பூசி பதினைந்து நிமிடங்கள் ஊறவிடுங்கள். பிறகு முகத்தை நல்ல தூய்மையான, குளிர்ந்த நீரில் கழுவுங்கள். உங்கள் முகத்தோற்றத்தில் பளபளப்பை காண முடியும். தொடர்ந்து இவ்வாறு இரண்டு வாரங்கள் செய்து வர உங்களால் நம்ப முடியாத அளவிற்கு உங்கள் முகம் பொலிவு பெற்றிருக்கும்.


மேலே குறிப்பிட்ட அனைத்தும் இயற்கையாக விளைந்த பொருட்களைப் பயன்படுத்தி செய்வதால் எந்த வித பக்கவிளைவுகள் ஏற்படாது. மேலும் இயற்கை மருத்துவப் பொருட்களைக் கொண்டு செய்வதால் முழுப் பயன்களையும் பெற குறைந்த பட்சம் இரண்டு வாரங்கள், பதினைந்து நாட்கள் ஆகும். நம்பிக்கையோடு செய்து பாருங்கள்.. நீங்களும் உலக அழகிதான்…!!! உலக அழகன்கள்தான்…!!!

வாழ்க வளமுடன்


நான் உங்கள் நண்பன் பிரதீப்


மீண்டும் ஒரு நல்ல பதிவோடு உங்களை நான் சந்திக்கின்றேன்


நன்றி வணக்கம.

                                      🙏

No comments:

Post a Comment