Thursday, 1 December 2016

குர்குர்ரே சாப்பிட்ட பிறகு ஈனோ குடித்த சென்னை மாணவர் அடுத்த நொடியே மரணம்?

சென்னையை சேர்ந்த மாணவர் ஒருவர் குர்குர்ரே சாப்பிட்ட பிறகு செரிமான கோளாறு ஏற்பட்டதாகவும், அதற்கு நிவாரணியாக ஈனோ கொடுத்த மறு நிமிடமே மரணம் அடைந்ததாக ஒரு செய்தி வைரலாக ஆன்லைன் மற்றும் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இதுக்குறித்து தி இந்தியன் எக்ஸ்பிரஸ்-ல் வெளியான செய்தி.

இதை பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளார் மற்றும் திரைப்பட இசை அமைப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் பக்கத்திலும் பதிவு செய்திருந்தார்.

ஆனால், அந்த பதிவை அந்த மாணவனின் உறவினர் வேண்டுகோளுக்கு இணங்கி நீக்கியதாகவும், தான் முன்தினம் பதிவு செய்தது முற்றிலும் உண்மையானது என்றும் தனது மற்றொரு பதிவில் கூறியிருக்கிறார்.

நடந்தது என்ன? 


ஸ்நாக்ஸ் மற்றும் அமில நீக்கி (Antacid) அடுத்தடுத்து உட்கொண்ட சென்னையை சேர்ந்த சிரிஷ் எனும் மாணவர் மரணம் அடைந்துள்ளார்.

இதயத்திற்கு செல்லும் இரத்தநாளத்தில் அதிக அழுத்தம் உண்டாகி, இரத்தநாளம் வெடித்து, வயிற்றில் இரத்த போக்கு உண்டாகி மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது.

மாணவனின் மரண சம்பவத்தை பற்றி பெற்றோர்கள் எதுவும் பேசவில்லை. போலீசிடமும் இதுகுறித்த எந்த ஒரு ரிப்போர்ட்டும் பதிவாகவில்லை.

ஜேம்ஸ் வசந்தன்! 


ஜேம்ஸ் வசந்த் அவர்களது மகனின் வகுப்பில் உடன் பயிலும் மாணவன் தான் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர். இதை தனது நீக்கப்பட்ட பதிவில் ஜேம்ஸ் வசந்தன் குறிப்பிட்டு இருந்தார் என சில தகவல்கள் கூறகின்றன.

கெமிக்கல் ரியாக்ஷன்! 


ஒரு சில பயோ - கெமிக்கல்கள் ஒன்றுடன் ஒன்று சேரும் போது அது விஷத்தன்மையாக மாறும் வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால் செரிமான கோளாறு, வயிற்றுப்போக்கு, உயிரிழப்பு கூட உண்டாகலாம்.

உணவு மற்றும் ஆய்வு துறை! 



இது உண்மையா? பொய்யா? என்பதை தாண்டி, இப்படி ஒரு சில உணவுகளை ஒன்றாக அல்லது அடுத்தடுத்து உட்கொள்ளும் போது அதனால் ஆரோக்கிய பாதிப்புகள் உண்டாக வாய்ப்புகள் உண்டா? அப்படி இருந்தால் அவை எந்தெந்த உணவு கலவைகள் என்பது பற்றி உணவு மற்றும் ஆய்வு துறையினர் ஆராய்ச்சி செய்து வெளியிட வேண்டியது அவசியம்.


அரிது! 


இதுபோன்ற நிகழ்வுகள் அரிதாக நிகழலாம் என்றாலும் கூட இழப்பது விலைமதிப்பற்ற உயிர் என்பதை கருத்தில் கொண்டு அரசும், ஆய்வு துறையினரும் இதற்கான நடவடிக்கையை உடனக்குடன் எடுக்க வேண்டியது அவசியம்.

No comments:

Post a Comment