Friday, 2 December 2016

தலைமுடி உதிர்வுக்கு இரண்டே நாட்களில் குட்பாய்.........!

தலையை சீவும் போது கொத்து கொத்தாக முடி உதிர்றதா? அப்படி என்றால் இது தான் அதற்கு தீர்வு.




கீழே கொடுக்கப்பட்டுள்ள மூன்று பொருட்களையும் கொண்று தலைமுடிக்கு ஹேர் பேக் போட்டு வந்தால், இரண்டே நாட்களில் உங்கள் தலைமுடி உதுர்வது குறைந்திருப்பதை நன்கு காணலாம்.


தேவையான பொருட்கள்:

தேங்காய் பால் – 2 டேபிள் ஸ்பூன்
 வெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன்
 நெல்லிக்காய் – 1

செய்யும் மற்றும் பயன்படுத்தும் முறை:

 * முதலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

* பின் அதனை தலையில் ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைக்கவும்.

* பின்பு மைல்டு ஷாம்பு அல்லது சீகைக்காய் போட்டு தலைமுடியை அலச வேண்டும்.

* இந்த முறையை வார இறுதியில் செய்து வந்தால், தலைமுடியின் ஆரோக்கியம் மேம்பட்டு, தலைமுடி உதிர்வது தடுக்கப்படும்.

No comments:

Post a Comment