Thursday, 1 December 2016

ரகசிய கேமராவை கண்டறிவது எப்படி.....?

இன்றைய நவீன உலகின் வளர்ச்சியால் நன்மைகளும் உண்டு தீமைகளும் உண்டு அதிலும் முக்கியமாக மக்களை அச்சுறுத்தும் விடையம் இரகசிய கேமராக்கள் (spy cameras) இவை பெண்கள் உடைமாற்றும் அறைகளில் முகம்பார்க்கும் கண்ணாடிகள், மணிக்கூடு, ஒளிரும் மின்விளக்கு, பேனா, சாவிக்கொத்தை, லைட்டர் போன்று பல வடிவங்களில் விற்பனை செய்யபட்டு வருகின்றன மேலதிக படங்களை காண இங்கேகிளிக் செயுங்கள் இப்படிப்பட்ட இரகசிய கேமராக்களை எப்படி கண்டறிவது என்று பார்ப்போம்

1. அறைக்குள் நுழைவதற்கு முன் உங்கள் செல்போனிலிருந்து கால் செய்ய முடிகிறதா.?என்பதை உருதிப்படுத்திக்கொள்ளவும்..

2.பின்னர் அறைக்குள் சென்றவுடன் மீண்டும் உங்கள் செல்போனிலிருந்து கால் செய்து பார்க்கவும் .

3.பலமுறை முயற்சித்தும் உங்களால் கால் செய்ய முடியாவிட்டால் நிச்சயம் அங்கே ரகசிய கேமரா வைகப்பட்டிருகிறது..

எப்படி என்றால்....

4..கண்ணாடி இழை கேபிள் (fiber optic cable)வழியாகத்தான் ரகசிய கேமராக்கள் இணைக்கப்பட்டிருக்கும்.இந்த கண்ணாடி இழை கேபிள் குறுக்கீடுகாரணமாக உங்களுடைய செல்போன் சமிக்ஞை(signal transfer) பரிமாற்றங்கள் தடை செய்யப்படுவதே நீங்கள் கால் செய்ய முடியாதற்க்கு காரணம்.

ஹோட்டல் அறைக்குள் நுழைந்ததும் அனைத்து மின் விளக்குகளையும் அணைத்து விட்டு, அறை முழுவதையும் செல்போனில் வீடியோ எடுங்கள். பின்னர் அதை ஓடவிட்டுப் பாருங்கள். எந்த இடத்திலாவது சிவப்பு அல்லது வெள்ளை நிற ஒளி வந்தால் கேமரா இருக்கிறது என்று அர்த்தம்.

செல்போனில் யாரிடமாவது பேசியபடியே அறை முழுவதும் மெதுவாக நடந்து செல்லுங்கள். திடீரென இரைச்சல் சத்தம் கேட்டால், அருகே ரகசிய கேமரா போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள் இருக்கிறது என்று உணர்ந்துகொள்ளலாம்.

ரகசிய கேமரா மட்டு மின்றி, முகம் பார்க்கும் கண்ணாடி யால் கூட வில்லங்கம் ஏற்பட லாம். பொது வாக உயர் அளவிலான போலீஸ் விசாரணை, ஆட்களை அடையா ளம் காட்டுதல் போன்றவற்றுக்கு ‘டூ வே’ (இருபக்க) கண்ணாடி பயன்படுத்தப்படும். அதாவது, முகம் பார்க்கும் சாதாரண கண்ணாடிதான். ஆனால், அதன் பின்னால் இருந்துகொண்டு இங்கு நடப்பதை பார்க்க முடியும். அவர்கள் இருப்பது இங்கிருந்து தெரியாது. லாட்ஜ்கள், ஜவுளிக் கடைகளில் இருப்பது இத்தகைய கண்ணாடி இல்லை என்பதை உறுதிசெய்துகொள்வது அவசியம்,............

இதுபோன்ற ரகசிய கேமராக்கள், அகச்சிவப்பு கேமராக்களைக்கூட கண்டுபிடிக்கக்கூடிய கருவிகளும் சந்தையில் கிடைக்கின்றன.

No comments:

Post a Comment