Tuesday, 6 December 2016

அழகைக் கெடுக்கும் முகப்பருவை தவிர்க்க சிம்பிள் டிப்ஸ்!



முகப்பருக்கள் டீன் ஏஜினரை பாடாய்ப்படுத்தும் பிரச்னை. பலவகையான கிரீம்களையும் சோப்புகளையும் பயன்படுத்தினாலும், தீர்வு என்னவோ கிடைத்தபாடில்லை. இதனால் ஏற்படும் மனஉளைச்சலும் தாழ்வுமனப்பான்மையும் கடுமையானவை. வெளியில் செல்லும்போதும், பொது நிகழ்ச்சிகள், விேசஷங்கள், திருமண நிகழ்வுகளில் பங்கேற்கும்போதும் போட்டோக்களுக்கு போஸ் கொடுக்கும்போதும் முகப்பரு தரும் சங்கடம் மோசமானது. சில பருக்கள் வலி, அரிப்பை ஏற்படுத்துவதோடு, மறைந்தாலும் தழும்பை உருவாக்கி முக அழகைக் கெடுக்கின்றன. முகப்பருவில் இருந்து விடுதலையே கிடையாதா? இதற்கான தீர்வுதான் என்ன? வாங்க பார்க்கலாம்!

                  எதனால் ஏற்படுகிறது?

<a href="https://www.popads.net/users/refer/467651"><img src="http://banners.popads.net/468x60.gif" alt="PopAds.net - The Best Popunder Adnetwork" /></a>

சருமத்துக்கு அடியில் உள்ள செபேசியஸ் சுரப்பிகள் எண்ணெய் போன்ற வழுவழுப்பான திரவத்தைச் சுரக்கும். இதை, சீபம் என்பார்கள். உடல் முழுதும் இந்த சுரப்பி இருந்தாலும், இந்தத் திரவம் முகத்தில் கன்னம், மூக்கு, நெற்றி ஆகிய பகுதிகளில்தான் அதிகமாகச் சுரக்கும். இது, சருமத்தின் ஈரப்பதத்தைத் தக்கவைப்பதோடு, சருமம் வறட்சி அடையாமல் பாதுகாக்கும்; பளபளப்பான தோற்றம் தரும். மேலும், முகத்தசைகள் சுருங்கி விரியவும் இந்தச் சுரப்புகள் உதவும். பருவ வயதில் ஆண்ட்ரோஜன் (Androgen) என்ற ஹார்மோன் சுரக்கத் தொடங்கும். சிலருக்கு ஆண்ட்ரோஜன் சுரப்பு அதிகமாகும்போது, அது சீபத்தையும் அதிகமாகச் சுரக்கச்செய்கிறது. இதனால் முகத்தில் எண்ணெய்ப் பசை அதிகரித்து, பருக்கள் உருவாகின்றன. காற்றில் உள்ள கண்ணுக்குத் தெரியாத தூசுக்கள் பருக்களில் ஒட்டிக்கொள்ளும்போது, பாக்டீரியா தொற்று ஏற்பட்டு சீழ் பிடிக்கிறது.

              பன்னீர் - எலுமிச்சைச் சாறு

எலுமிச்சைச் சாறு, ரோஜாவால் தயாரிக்கப்பட்ட பன்னீர் இரண்டையும் சம அளவு எடுத்துக் கலந்து முகத்தில் பூசி, அரை மணி நேரம் ஊறவைத்து, பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும். வாரம் மூன்று நாட்கள் இவ்வாறு செய்துவந்தால், முகப்பரு மறைந்துவிடும். எக்காரணம்கொண்டும் எலுமிச்சைச் சாற்றைத் தனியாக முகத்தில் தேய்க்கக் கூடாது. இதில் உள்ள சிட்ரிக் அமிலம் சருமத்தைப் பாதிக்கும். பன்னீர் வாங்கும்போது, அதன் தரத்தைப் பரிசோதித்து வாங்கிப் பயன்படுத்துவது அவசியம்.


வாழ்க வளமுடன்
நான் உங்கள் நண்பன் பிரதீப்
மீண்டும் அடுத்த ஒரு நல்ல பதிவோடு உங்களை நான் சந்திக்கின்றேன்
நன்றி வணக்கம்.
🙏

No comments:

Post a Comment